மாவீரர் வாரம் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நினைவேந்தல் வார முதல் நாள் நிகழ்வு நடைபெற்றது.
பல்கலைக்கழக மாணவர்களால் மாவீரர் நினைவுத் தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
மாவீரர் வாரத்தையொட்டி யாழ். பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மாவீரர் நினைவுத் தூபி அமைந்துள்ள பகுதி பல்கலைக்கழக மாணவர்களால் வர்ணம் தீட்டப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளதுடன் தூபியைச் சுற்றி சிவப்பு, மஞ்சள் கொடிகளும் கட்டப்பட்டுள்ளன.
விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தமது உயிரைப் போராட்டக் களத்தில் தியாகம் செய்தவர்கள் நினைவாக நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், நவம்பர் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.