சீனாவில் இருந்து 2019ஆம் ஆண்டு பரவிய கொரோனா வைரஸால் சுற்றுலாவை நம்பியுள்ள நாடுகளின் பொருளாதாரம் பெரிய அளவில் சரிவை சந்தித்தது.
இதற்கிடையே சுற்றுலாவை மேம்படுத்தவும், சுற்றுலா பயணிகளைக் கவரவும் சீனா பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது.
இந்நிலையில், எதிர்வரும் டிசெம்பர் மாதம் 1ஆம் திகதியிலிருந்து பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின் மற்றும் மலேசியா ஆகிய நாட்டு மக்கள் விசா இல்லாமல் சீனாவிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவர் என சீனா அறிவித்துள்ளது.
ஏற்கெனவே இலங்கை உள்பட சில நாடுகள் விசா இல்லாமல் குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வரலாம் என அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.