அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹென்ரி கிஸ்ஸிங்கர் (Henry Kissinger) காலமானார். அவருக்கு வயது 100 ஆகும்.
அவருடைய வீட்டில் வைத்து அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1923ஆம் ஆண்டு ஜெர்மனியில் பிறந்த அவர், 1938ஆம் ஆண்டு தமது குடும்பத்துடன் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தார். பின்னர் 1943இல் கிஸ்ஸிங்கர் அமெரிக்கக் குடியுரிமை பெற்றார்.
இரண்டாம் உலகப் போரின்போது அவர் ஐரோப்பாவில் இராணுவச் சேவையாற்றினார்.
ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்ற அவர் 1952இல் முதுநிலைப்பட்டத்தையும் 1954இல் முனைவர் பட்டத்தையும் பெற்றார்.
அவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.