0
சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பின் தேரர்கள் குழுவினர் மற்றும் உலகத் தமிழர் பேரவையின் (GTF) உறுப்பினர்கள் நேற்று (08) கண்டி தலதா மாளிகையைத் தரிசித்தனர்.
அதற்கு முன்பாக அவர்கள், அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து, இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், மறுசீரமைப்பு, சமூக நலன் மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றை மையமாகக் கொண்ட 6 முக்கிய விடயங்களை உள்ளடக்கிய “இமயமலைப் பிரகடனம்” தொடர்பில் தெளிவுபடுத்தினர்.