ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத்தில் அரை மணி நேரத்தில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் நிலநடுக்கவியலுக்கான தேசிய ஆணையம் தெரிவித்துள்ளது.
முதல் நிலநடுக்கம், இன்று (03) அதிகாலை 12.28 மணியளவில் ஃபைசாபாத்தில் இருந்து 126 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவாகியுள்ளது.
அடுத்து அதிகாலை 12.55 மணியளவில் ஃபைசாபாத்தில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 4.8 ஆக பதிவாகி உள்ளது.
ஆப்கானிஸ்தானின் நிலநடுக்கவியலுக்கான தேசிய ஆணையம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் இதனை பதிவிட்டுள்ளது.