3
யாழ்ப்பாணம், இளவாளைப் பகுதியில் கைக்குண்டுடன் ஒருவர் பொலிஸாரால் இன்று (14) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
சோதனை நடவடிக்கையின்போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருட்டு நடவடிக்கையுடன் தொடர்புபட்டவரிடமே இவ்வாறு கைக்குண்டு மீட்கப்பட்டதால் களவு நடவடிக்கைக்குப் பயன்படுத்தும் நோக்கில் அதை அவர் வைத்திருந்தாரா அல்லது ஏதும் சமூக விரோதச் செயலுக்காக வைத்திருந்தாரா எனப் பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.