இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் (73 வயது), கடந்த சில சில மாதங்களாகவே புரோஸ்டேட் சுரப்பி வீக்க நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நோய்க்கான சிகிச்சைக்காக அரசர் சார்லஸ், அடுத்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போது ஆபத்தில்லாத நிலையில் உள்ள இந்நோய்க்காக சிகிச்சை பெறுவார் என தெரிவித்த அந்த அறிக்கையில், சிகிச்சை முறைகள் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
இதை தொடர்ந்து, மன்னர் சார்லஸ் பங்கேற்க இருந்த பல நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன.
இதேவேளை, 50 வயதை கடந்த பெரும்பாலான ஆண்களுக்கு புரோஸ்டேட் சுரப்பி வீக்கம் ஒரு பொதுவான நோய் என இங்கிலாந்து சுகாதார துறை தெரிவித்துள்ளது.