கிளிநொச்சி, பன்னங்கண்டி பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்னங்கண்டி அ.த.க. பாடசாலைக்கு முன்பாக உள்ள கழிவு வாய்க்காலிலேயே சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மேற்படி நபர் மது போதையில் இருந்த நிலையில் நேற்று மாலை 7 மணியளவில் மக்களால் அவதானிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இன்று அதிகாலை அந்த நபர் சடலமாகக் காணப்படுவது அவதானிக்கப்பட்டு பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது.
மருதநகர் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஜெயராம் டினேஸ் எனும் இளைஞரே உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மைய நாட்களாக இளைஞர்களின் உயிர் இழப்புக்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.