இங்கிலாந்து, கென்ட் நகரின் Charing ரேஸ்கோர்ஸில் இறுதி குதிரை ஓட்டப் பந்தயம், நேற்று ஞாயிற்றுக்கிழமை (04) இடம்பெற்றது.
இதன்போது, கேகன் கிர்க்பி (Keagan Kirkby) எனும் 25 வயது இளைஞன், குதிரையில் இருந்து தூக்கி வீசப்பட்டு மரணித்துள்ளமை போட்டி பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியுள்ளது.
இளைஞன், குதிரையில் இருந்து வீசப்பட்டவுடன் விரைந்து செயற்பட்ட மருத்துவக் குழு மற்றும் ஏர் ஆம்புலன்ஸ் குழுவினர் சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இளைஞன் மரணித்தார்.
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள குறித்த இளைஞனின் மரணம் குறித்த இங்கிலாந்து குதிரைப் பந்தய ஆணையகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் “இந்த மரண செய்தியை அறிந்து நாங்கள் பேரதிர்ச்சிக்கு உள்ளாகினோம். ஒட்டுமொத்த பந்தயத் துறையும் மிகவும் இளமையாகவும் திறமையாகவும் இருக்கும் ஒருவரை இழந்ததற்காக துக்கத்தில் இருக்கும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கேகன் கிர்க்பி, கடின உழைப்பாளி மற்றும் ஒரு சிறந்த குதிரை ஓட்டப் பந்தய வீரர் என்றும், 2019ஆம் ஆண்டு தனது தொழுவத்தில் இணைந்து, அந்த ஆண்டே தொழில்துறை அளவிலான பணியாளர்கள் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றும், கேகன் பணியாற்றிய தொழுவத்தின் உரிமையாளர் நிக்கோல்ஸ் (Nicholls) தெரிவித்துள்ளார்.