பாகிஸ்தானில் நாளை (8) பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பலூசிஸ்தான் மாகாணத்தில் இன்று அடுத்தடுத்து 2 இடங்களில் குண்டுவெடிப்பு இடம்பெற்ற நிலையில், 26 பேர் உயிரிழந்தனர்.
பிஷின் பகுதியில் அஸ்பந்தியார் காக்கர் என்ற சுயேச்சை வேட்பாளரின் தேர்தல் அலுவலகம் வெளியே முதல் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. முதல் குண்டுவெடிப்பு நடந்ததும், கீலா சைபுல்லா பகுதியில் மற்றொரு குண்டுவெடிப்பு நடந்தது.
தேர்தல் அலுவலகத்திற்கு வெளியே நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 12 பேர் கொல்லப்பட்டனர். காயமடைந்த நபர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.
இதனையடுத்து, குவெட்டாவில் உள்ள மருத்துவமனைகளில் அவசரகால நிலை பிறப்பிக்கப்பட்டது. இந்த தாக்குதல்களுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.