குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கணவன் கழுத்து நெரித்துப் படுகொலை செய்துள்ளார்.
இந்தக் கொடூர சம்பவம் திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
தோப்பூர் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளம் பெண்ணே உயிரிழந்துள்ளார்.
சந்தேகநபரான 33 வயதுடைய கணவர் மூதூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மனைவியின் ஆடையின் ஒரு பகுதியைப் பயன்படுத்தி அவரின் கழுத்தைக் கணவன் நெரித்துக் கொலை செய்துள்ளார் என்று பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.