தமிழ் பாடசாலைகள் விளையாடுக் சங்கம் வருடம் தோறும் நடாத்தும் கோடைகால விளையாட்டு விழாவினை இவ்வாண்டு நாச்சியார் நிறுவனத்துடன் இணைந்து விளையாட்டுப் பெருவிழாவாக நடாத்துகின்றனர். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 27ம் திகதி தெற்கு லண்டன் பகுதியிலுள்ள ரெய்னஸ் பார்க் விளையாட்டுத் திடலில் நடைபெறுகின்றது.
கடந்த ஆவணி 31ம் திகதி ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வு மழை காரணமாக பின் போடப்பட்டு மீண்டும் இம்மாதம் 27ம் திகதி நடைபெறுகின்றது.
துடுப்பாட்டம், வலைபந்தாட்டம், கிளித்தட்டு, கபடி, முட்டி உடைத்தல், கயிறு இழுத்தல் மற்றும் தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்களுடன் பல்சுவை நிகழ்வுகளும் நடைபெற உள்ளது.
அழகுராணிப் போட்டி, ஆணழகன் போட்டி, ராப் பாடல்கள், பொப் பாடல்கள் மற்றும் கரகாட்டம் போன்ற நடனங்களும் இடம்பெற உள்ளது. பஞ்சாபிக் கலைஞர்களின் பங்கார பாடல்களும் சிறப்பம்சமாக இடம்பெறும்.