இந்தியாவில் விவசாயிகளின் தொழிற்சங்கங்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
பயிர்களுக்குக் குறைந்தபட்ச விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று இந்தியா விவசாயிகள் போராடுகின்றனர்.
விவசாயிகள் நடத்திய பேரணி, தலைநகர் புதுடில்லியிலிருந்து சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் பாதுகாப்புப் படையினரால் நிறுத்தப்பட்டது.
தொடர்புடைய செய்தி : “அவர்கள் விவசாயிகள் கிரிமினல்கள் அல்ல” – வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன்
கலகத் தடுப்பு பொலிஸார் கண்ணீர்ப் புகையைப் பயன்படுத்தி விவசாயிகளைக் கலைக்க முற்பட்டனர்.
விவசாயிகள், வயல்களில் பயன்படுத்தப்படும் வாகனங்களில் பேரணி நடத்தினர். சிலர் நடந்துசென்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பாதுகாப்புப் படையினரை எதிர்த்துப் போராடத் தயார் என்று அவர்கள் கூறினர்.
2021ஆம் ஆண்டில் பயிர்களுக்குக் கூடுதல் விலை தருவதாக அளித்த உறுதிமொழியை அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
அந்த ஆண்டு முழுதும் தொடர்ந்த ஆர்ப்பாட்டத்தின் விளைவாக, விவசாயிகளுக்கு ஆதரவாக இல்லாத சில சட்டங்களை இந்திய அரசாங்கம் இரத்துச் செய்தமை சுட்டிக்காட்டத்தக்கது.