ஆசியாவின் மிகப் பெரிய விமானக் கண்காட்சி, சிங்கப்பூரில் நேற்று (20) தொடங்கியது.
உலகின் 50க்கும் மேற்பட்ட நாடுகளைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்தக் கண்காட்சியில் பங்கேற்கின்றன.
முதல் நாளான நேற்று (20) சீனாவைச் சோ்ந்த கோமாக் மற்றும் அமெரிக்காவின் போயிங் நிறுவனங்களின் விமானங்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.
கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற சிங்கப்பூர் விமானக் கண்காட்சியில் ரஷ்ய நிறுவனங்கள் இடம்பெற்றிருந்தன.
ஆனால், உக்ரைன் போர் நடைபெற்று வரும் சூழலில் நடப்பாண்டுக் கண்காட்சியில் அந்நாட்டிலிருந்து ஒரு நிறுவனம் கூட பங்கேற்கவில்லை.
ஆனால், காஸா போர் தீவிரமாக நடைபெற்றும் சூழலிலும் இந்தக் கண்காட்சியில் இஸ்ரேலிய நிறுவனங்கள் பங்கேற்று, தங்களது தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தின.