12
கண்ணீர் முத்துக்களாக உதிர்கின்றன
கேவிக்கேவி மென்னிதழ்கள் வீங்கின
துரோகியின் நெஞ்சைக்
கிழிக்க அந்தஉடல் துள்ளியது
வயிறுகள் கூப்பாடு போடுகின்றன
அடுப்பு பிணமாய் குளிர்ந்து கிடக்கிறது
வெளியே போனவர்கள் திரும்பவில்லை
ஏலக்காய் மணம் தெருவெல்லாம் மணக்கிறது
கூட்டம் கூட்டமாய் பெண்கள் போகிறார்கள்
பசியோடு குடும்பங்களின் விழிகள் பூத்திருக்கின்றன
குழந்தை போல மழை பிரியம் கொஞ்சியது
மனசுக்குள் குளிர் கிச்சுக் கிச்சு மூட்டியது
சூடாக கொஞ்சம் தேனீர் அருந்த வேண்டும்
மழை புணுபுணுக்க ஆரம்பித்தது
அடகு வச்ச குடும்பம் மீளுமா?
உயிர்கள்
வடிந்து கொண்டிருக்கின்றன
மீட்சி என்ற உக்கிரச் சொல்
பறந்து போய் விட்டது.
வசந்ததீபன்