மாலியின் நாட்டின் கெனிபியா பகுதியில் இருந்து அதன் அருகில் உள்ள பர்கினோ பாசா என்ற நாட்டுக்கு நேற்று மாலை 5 மணியளவில் பஸ் ஒன்று பயணித்துள்ளது.
அந்த பஸ்சில் 40க்கும் மேற்பட்டோர் சென்ற நிலையில் கெனிபியா பகுதியில் உள்ள பாலத்தில் வைத்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் ஆற்றுக்குள் கவிழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் 31 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 10 பேர் படுகாயமடைந்தாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.