இங்கிலாந்தின் நொட்டிங்ஹம்ஷயர் பகுதியின் பிரதான வீதியில் 5 கார்கள் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடராக மோதி விபத்துக்குள்ளாகின.
அதிர்ஷ்டவசமாக எவருடைய உயிருக்கும் ஆபத்து ஏற்படவில்லை என்று BBC செய்தி வெளியிட்டுள்ளது.
விபத்தால் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்படவேண்டியிருந்தது. அது குறித்து Ashfield தீயணைப்புப் பிரிவு அதன் Facebook பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
“தற்போதைய நிலவரப்படி போக்குவரத்து வழக்கநிலைக்குத் திரும்பியுள்ளது,” என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
சம்பவம் குறித்துத் தகவல் ஏதேனும் இருந்தால் காவல்துறையைத் தொடர்புகொள்ளும்படி Ashfield தீயணைப்புப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.