பிரான்ஸில் இனி கருக்கலைப்பு செய்ய சட்டப்பூர்வ அனுமதி பெறத் தேவையில்லை.
பெரும்பாலான நாடுகள் கருக்கலைப்பிற்கு எதிராக இருந்து வரும் நிலையில், “கருக்கலைப்பு – பெண்களுக்கான அரசியலமைப்பு உரிமை” என அறிவித்த முதல் நாடு என்ற பெயரை பிரான்ஸ் பெற்றுள்ளது.
கருக்கலைப்பு பெண்களுக்கான அரசியலமைப்பு உரிமை தொடர்பான சட்ட மசோதா பிரான்ஸ் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த சட்ட மசோதாவிற்கு ஆதரவாக 780 வாக்குகளும், எதிராக 72 வாக்குகளும் பதிவாகின.
ஐந்தில் மூன்று பங்கு வாக்குகள் சட்டத்தை நிறைவேற தேவை என்ற நிலையில் அமோக பெரும்பான்மையுடன் மசோதா நிறைவேறியது.
கருக்கலைப்புக்கு ஆதரவானோர் இந்த செய்தியை கேட்டு, பிரான்ஸ் ஈபிள் டவர் முன் குவிந்து தங்களது சந்தோசத்தை வெளிப்படுத்தினர்.
அவர்கள் “my body my choice” (என்னுடைய உடல் என்னுடைய தேர்வு) என்பதை வெளிப்படுத்தினர். மேலும் இந்த வாசகம் ஈபிள் டவரில் மின் விளக்கால் ஜொலித்தது.