இங்கிலாந்து, நாட்டிங்ஹாம் (Nottingham) நகரத்தில் பஸ்ஸில் பயணித்த 14 வயது சிறுவனின் முகத்தில் குத்தப்பட்டு, அவனது கையடக்கத் தொலைபேசி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக 13, 14 மற்றும் 15 வயது மூன்று சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என நாட்டிங்ஹாம்ஷயர் பொலிஸார் தெரிவித்தனர்.
பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி ஸ்ட்ரெல்லியில் இருந்து நாட்டிங்ஹாம் நகர மையத்திற்கு பயணிக்கும் போது மேற்படி சிறுவர் குழுவினால் அவன் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
14 வயது சிறுவனின் முகத்தில் குத்திவிட்டு, அவரது கையடக்கத் தொலைபேசியை பறித்துக்கொண்டு அந்த குழுவினர் பஸ்ஸில் இருந்து அவசரகால வழிகள் வழியாக தப்பிச் சென்றனர்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூன்று சிறுவர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் தொடர்கின்றன.