நேபாளத் தலைநகர் காத்மண்டுவை நோக்கி இன்று காலை புறப்பட்டு சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் குறைந்தது 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
தடிங் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பஸ் திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து திரிசூலி ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
ஆற்றில் பஸ் கவிழ்ந்ததில் பயணிகள் பலரும் நீருக்குள் மூழ்கியதுடன், 5 பேர் உடல்களை மீட்பு குழுவினர் மீட்டதுடன், காயமடைந்த 2 பேர் சிகிச்சைக்கு கொண்டு சென்றபோது உயிரிழந்தனர். மேலும், 30 பேர் காயமடைந்தனர்.
இதேவேளை, நேபாளத்தில் ஒவ்வோர் ஆண்டும் வீதி விபத்துகளில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.