ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றி வந்த இந்தியர் ஒருவர் மரணித்துள்ளார்.
இம்மரணம் தொடர்பில், ரஷ்யாவில் உள்ள இந்தியத் தூதரகம், அதன் X தளத்தில் பதிவிட்டுள்ளது.
“இந்தியர் முகமது அஸ்ஃபான் என்பவர் மரணித்துவிட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. நாங்கள் ரஷ்ய அதிகாரிகள் மற்றும் மரணித்தவரின் குடும்பத்தாருடன் தொடர்புகொண்டிருக்கிறோம். அவரது உடலை இந்தியா கொண்டு வருவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று அதில் பதிவிட்டுள்ளது.
குறித்த இந்தியர், உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா சார்பில் போரில் ஈடுபட்டிருந்துள்ளார் எனத் தெரியவருகிறது.
இதேவேளை, அதிக சம்பளம் கிடைக்கும் எனக் கூறி வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்ட இந்தியர்களில் ஒருவரே முகமது அஸ்ஃபான் என அவரது குடும்பத்தார் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளனர்.