புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையை வந்தடைந்தனர் முருகன், பயஸ், ஜெயக்குமார்! 

இலங்கையை வந்தடைந்தனர் முருகன், பயஸ், ஜெயக்குமார்! 

1 minutes read
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, 33 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்ட முருகன், றொபேர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகிய மூவரும் இன்று பகல் இலங்கையை வந்தடைந்தனர்.

அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நீண்ட நேரம் விசாரணைக்குட்படுத்தப்பட்ட பின்னர்  மாலை விடுவிக்கப்பட்டனர். அதன்பின்னர் அவர்கள் மூவரையும் குடும்பத்தினர் பொறுப்பேற்றனர்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் 7 பேர் 33 வருடங்களின் பின்னர் கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விடுதலை செய்யப்பட்டனர்.

அவர்களில் நளினி (முருகனின் மனைவி) உள்ளிட்ட மூவர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் அவர்களின் உறவினர்களுடன் இணைக்கப்பட்டனர். ஏனைய நால்வர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இலங்கை செல்வதற்கு ஆவணங்கள் இல்லை எனும் காரணத்தால் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

சுமார் ஒன்றை வருட காலமாகச் சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த நால்வரில் சாந்தன் அண்மையில் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்திருந்தார்.

எஞ்சிய மூவரையும் உயிருடன், உறவினர்களிடம் கையளிக்க வேண்டும் என இந்திய அரசுக்குப் பல தரப்பினரும் அழுத்தங்கள் வழங்கியமையால் மூவரையும் இலங்கைக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் இன்றைய தினம் அவர்கள் இலங்கையை வந்தடைந்தனர்.

வெளிநாடுகளில் உள்ள தமது உறவினர்களிடம் செல்வதற்கு ஏதுவாக சகல நாட்டுக்குக்குமான கடவுசீட்டை வழங்குமாறு மூவரும் கோரிக்கை விடுத்திருந்த போதிலும், இலங்கை செல்வதற்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டு, இலங்கைக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More