தைவானில் நேற்று (03) பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். 1,000க்கும் அதிகமானோர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த நில நடுக்கத்துக்குப் பிறகு 300க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் உண்டாகியுள்ளன.
25 ஆண்டுகளில் பின் அங்கு ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கமாக இது கருதப்படுகிறது.
இந்த நிலநடுக்கத்தில் சேதமுற்ற சுரங்கத்திற்குள் இருந்த 6 ஊழியர்கள் ஹெலிக்காப்டர் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த ஹுவாலியென் (Hualien) நகரின் சுரங்கத்தில் அவர்கள் சிக்கியிருந்தனர்.
ஹெலிக்காப்டர், ஊழியர்களைக் காப்பாற்றிக் கொண்டுவருவது காணொளிகளில் தெரியவந்ததுள்ளது.
இதேவேளை, மலைப்பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்படக்கூடும் என்றும் பாறைக்கற்கள் உருண்டு விழக்கூடும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
எனவே, தேவையில்லாமல் மலைப்பகுதிகளுக்குச் செல்லவேண்டாம் என்று தைவானிய ஜனாதிபதி சாய் இங் வென் அறிவுறுத்தியுள்ளார்.