பேரூடலுக்குப் பின் சந்தித்துக்கொள்கையில்
இராமனின் கற்பை
நிரூபிக்கக் கட்டளையிடுகிறாள் சீதை
தடுமாறியபடியே
தன் கையிலிருக்கும்
செல்போனைக் கையளிக்கையில்
முத்தக்குறிகளை வாரியிறைத்து
வாட்ஸாப்பில் சிரிக்கிறாள்
சூர்ப்பனகை
நெடுநாளைக்கு முன்னர்
சபரியுடனான இரவுணவில்
சந்தோசமாய் கிளிக்கிய
செல்ஃபிப் புகைப்படம்
சிக்கிக்கொள்கிறது கலரியில்
தாரையின் புகைப்படமொன்றிற்கு
“வாவ், அற்புதமென்று ”
கமெண்டிட்ட கவிதையொன்று பேஸ்புக்கில் பல்லிளிக்கிறது
இத்தனைக்குப் பிறகும்
இன்னும் என் புகைப்படம்தானா?
உம் டிபி யில் இருக்கிறதென
செல்லமாய்
கடிந்துகொள்கிறாள் சீதா
வில்வரசன்