இஸ்ரேல் மீது ஈரான் செலுத்தியுள்ள ஆளில்லா விமானங்களை இஸ்ரேல் சுட்டு வீழ்த்துகிறது.
உள்ளூர் நேரப்படி இரவு 1.45 மணி ஆளில்லா விமானங்களை இஸ்ரேல் நடுவானில் சுட்டு வீழ்த்தியது.
இதனையடுத்து, நகரம் முழுவதும் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டுள்ளதுடன், ஈரானின் தாக்குதலை எதிர்கொள்ள தமது நாடு தயாராக இருப்பதாய் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மீது பல ஆளில்லா விமானங்களையும் ஏவுகணைகளையும் ஏவியுள்ளதாக ஈரான் அறிவித்தது.
ஈரானின் தாக்குதல் பற்றி தகவல் கிடைத்ததும் விழிப்பு நிலையில் இருப்பதாக இஸ்ரேலிய தற்காப்புப் படை தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, இஸ்ரேல், ஜோர்தான், லெபனொன், ஈராக் ஆகியவை அவற்றின் ஆகாய வெளியை மூடியுள்ளதுடன், ஜோர்தானும் சிரியாவும் அவற்றின் ஆகாயத் தற்காப்பைத் தயார்-நிலையில் வைத்திருக்கின்றன.
சிரியாவில் உள்ள ஈரானின் தூதரகத்தை கடந்த ஏப்ரல் முதலாம் திகதி இஸ்ரேல் தாக்கியதில் 7 இராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர். அதற்குப் பதிலடியாக இஸ்ரேலைத் தாக்கப்போவதாக ஈரான் தெரிவித்துள்ளது.