செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் ரௌத்திரம் பழகடா! | கொட்டிய ஆரன் 

ரௌத்திரம் பழகடா! | கொட்டிய ஆரன் 

0 minutes read



அந்த
ஒற்றைக் குவியம் இடிந்தழிந்து
ஒப்பாரி கேட்டது…
அன்றெங்கள்…
நாக்கு அறுபட்டு – இன்று
நானூறு வருடம் கழிந்தே போனது…

வாடா மலரில்…
வாசத்தின் உறைவிடத்தில் – உயிர்
தீய்ந்துபோக – உடல்
தீமிதித்தது…

சுவாசம் அழிந்து
நாசமாய்ப்போனது…

அடிக்கவா முடியும்?
மடிந்து முடங்கிக் கிடக்கும்
அடிமைத் தனத்திற்கு
குளறத்தானே முடியும்…

எத்தனை திருக்கோவில்கள்
எத்தனை சிவன்கள் இருந்தாலும் – அவன் அத்தனையும் தாண்டிய சீவன்…
இங்கு எவரின்…
உற்ற அப்பனினதும் பெத்தப்பன்!
தாயினும் நல்ல தலைவன்..

அது…
இறையின் காட்சிபீடமன்று – எம்
நிறையின் ஆட்சிபீடம்!
தென்பட்டுச் சுழன்ற
பண்பாட்டு மையம்!

அங்கு…
வெள்ளையன் சுளாவிய..
திரவியம் பெரிதன்று
திரு இறையும் பெரிதன்று..
கோயிலும் பெரிதன்று
கோட்டையும் பெரிதன்று…
உடமை பெரிதன்று – எங்கள்
உயிரும் பெரிதன்று…

ஆனால்…
தொன்மைகள் அறுபட்ட
தோரணை பெரியது – எங்கள்
வாண்மைகள் வாடிமறைந்த
வேதனை பெரியது….

வரலாறு செழித்த
கல்வேர் அது…
அறவாட்சியின்
அரண்மனை அது…
மரபு தந்த
மாபெரும் சாசனம் அது…
வாழ்வு தந்த
வையாளிச் சுவடு அது…
தாழ்வு கொண்டதன்
தாற்பரியம் தேடுகிறாயா?

இனியேனும்
ரௌத்திரம் பழகடா தமிழா!

கொட்டிய ஆரன் 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.