ஜப்பானின் சில பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளுக்குச் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்ற போதிலும், சுற்றுலா பயணிகளை ஜப்பான் வெகுவாக கவர்ந்து வருகின்றது.
இதனால் ஜப்பான் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
ஜப்பானுக்கு மார்ச் மாதத்தில் 3 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுப்பயணிகள் சென்றதாக அரசாங்கத் தரவுகள் காட்டுகின்றன.
அது ஒரே மாதத்தில் அங்குப் பதிவான மிக அதிக எண்ணிக்கையாகக் கருதப்படுகிறது.
ஜப்பான் சுற்றுலாத்துறைக்கு அது புது உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2023ஆமு் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிட்டால் அது 69.5 சதவீதம் அதிகமாகும்.
COVID-19 பெருந்தொற்றுப் பரவுவதற்கு முன்னர், 2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிட்டால் அது 11.6 சதவீத உயர்வு என ஜப்பான் தேசியச் சுற்றுலா அமைப்பு தெரிவித்தது.
தற்போது வசந்த காலம் என்பதாலும் விடுமுறை மாதம் ஆகையாலும் ப்பானுக்குச் சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கை இன்னும் அதிகரித்துள்ளது.
மேலும், மிக அதிகமான சுற்றுலாப் பயணிகள் இந்தியா, ஜெர்மனி, தைவான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து ஜப்பானுக்குச் சென்றுள்ளனர்.