அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள தேவாலயத்தில் நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் காயமடைந்த அருட்தந்தை குணமடைந்துவருகிறார்.
இந்நிலையிர், இத்தாக்குதலை நடத்திய 16 வயது இளைஞனை தாம் மன்னித்துவிட்டதாக அருட்தந்தை கூறினார்.
அந்த இளைஞனை ‘நீ யாராக இருந்தாலும் உன்னை நான் மன்னித்துவிட்டேன். உன்னை யார் அனுப்பியிருந்தாலும் அவர்களையும் மனித்துவிட்டேன். நீ என் மகன்’ என்று அருட்தந்தை கூறினார்.
தாக்குதலில் அருட்தந்தை மார் மாரி இமானுவெலுக்குத் (Mar Mari Emmanuel) தலையிலும் நெஞ்சிலும் வெட்டுக் காயங்கள் ஏற் பட்டன.
பிஷப் இமானுவெலுக்கு இணையத்தில் சுமார் 200,000 ரசிகர்கள் உள்ளனர். “யாரும் பதறவேண்டாம்” என்று அவர் YouTube காணொளியில் குறிப்பிட்டார்.
மேலும், தாக்குதலுக்குப் பிறகு கொந்தளித்த பக்தர்களிடம் அமைதி காக்கும்படி அருட்தந்தை கேட்டுக்கொண்டார்.
தாக்குதலை நடத்தியதாக நம்பப்படும் இளைஞன், மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அவருக்கு வழங்கப்படும் சிகிச்சை பல நாள்களுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.