டிக்டாக் செயலியை நிர்வகிக்கும் சீனாவின் Byte-Dance நிறுவனத்தின் உரிமப் பங்குகளைத் தள்ளுபடி செய்யக் கோரும் சட்டமூலத்தை அமெரிக்க நாடாளுமன்றம் அங்கீகரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரேன், இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கான திட்டத்துடன் டிக்டாக் விலக்கல் சட்டமும் இணைக்கப்பட்டுள்ளதுடன், அவற்றின் மீது அமெரிக்க நாடாளுமன்றம் இன்று (20) வாக்களிக்க உள்ளது.
டிக்டாக் தடைக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தால், செனட் சபையிலும் அது துரிதமாக நிறைவேற்றப்படும் என்பதுடன், ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்திட்டதும் அது சட்டமாக மாறும்.