Byte Dance நிறுவனத்துடன் கொண்டுள்ள தொடர்பை நீக்காவிட்டால் டிக்டொக் செயலியைத் தடை செய்ய அமெரிக்க நாடாளுமன்றம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பான மசோதா ஜனாதிபதி ஜோ பைடனிடம் முன்வைக்கப்படுவதுடன், அவரும் மசோதாவில் கையெழுத்திட உள்ளதாக கூறி உள்ளார்.
இதனால், டிக்டொக் நிறுவனம் சில மாதங்களுக்குள் புதிய உரிமையாளரைத் தேடிக் கண்டுபிடிக்காவிட்டால் இல்லையேல் அது நிரந்தரமாக அமெரிக்காவில் தடை செய்யப்படும்.
மசோதாவில் ஜனாதிபதி பைடன் கையெழுத்திட்டதிலிருந்து 270 நாள்கள் அவகாசம் கொடுக்கப்படும்.
இந்த நிலையில், குறித்த மசோதாவில் பைடன் கையெழுத்திட்டால் அமெரிக்க அரசாங்கத்தின் மீது வழக்குத் தொடுக்க உள்ளதாக டிக்டொக் கூறியிருக்கிறது.