அன்னைக்கு அன்று
பசி வரவில்லை.- ஆனாலும்
அவருக்கு பெரும் தாகம்
எடுத்து இருந்தது.
ஈழத்தில் நடந்தேறிய
கொடுமைகள் விடுத்து
சுதந்திர தேசம் ஒன்றுக்காக
தாகம் எடுத்திருந்தது.
உடல் சோர்ந்து அவள்
படுக்கையில் சாய்ந்து
மெய் மறந்து போகையில்
மன உறுதி மாறாதிருந்தார்.
ஈழம் ஒன்றை விடுத்து
ஈனர் அடியில் வாழும்
அடிமை வாழ்வை வெறுத்து
கிடந்தார் அகிம்சைத் தவம்.
தோற்றுத் தான் போனோம்.
காந்தி தேசத்தின்
நயவஞ்சகத்தால் நாம் – நம்
வீரத்தாயை இழந்து போனோம்.
முப்பத்தொரு நாளில்
முடிந்து போனது
மனம் இடிந்து போகாத
தாயவளின் அகிம்சைப் போர்.
ஏங்கித் தான் அன்று
ஈழத்தமிழினம் தவித்தது.
இன்றும் மற்றொரு வலி
மனதை ஆளும் நிலையில்.
பசித்திருந்த நமக்கு
அந்த பொழுதுகள்
மீண்டு வந்து நினைத்திட
சொல்லிச் செல்கின்றன.
நதுநசி