அமெரிக்காவின் நம்பிக்கையுள்ள பாட்டி ஒருவருக்கு ரூ.1.9 கோடி பரிசு கிடைத்துள்ளது.
அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் தலைநகரான அனாபொலிஸ் பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவர், இம்மாதம் 22ஆம் திகதி மேரிலாந்தில் உள்ள ராயல் பார்ம்ஸ் உணவகத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு சிக்கன் உணவு ஆர்டர் கொடுத்து விட்டு காத்திருந்தார். அந்த நேரத்தில் அவர் 10 டொலர் மதிப்புள்ள கேசினோ ராயல் ஸ்லாட்ஸ் லொட்டரி டிக்கெட்டுகளை வாங்கினார்.
அந்த லொட்டரிக்கு ஜாக்பாட் பரிசாக 2 லட்சத்து 29 ஆயிரத்து 680 டொலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.9 கோடி) பரிசு கிடைத்துள்ளது.
இதையறிந்த அந்த மூதாட்டி தனது மகளிடம் லொட்டரி சீட்டை காட்டி எனக்கு ஜாக்பாட் அடித்துள்ளது என நினைக்கிறேன் என்று கூறி உள்ளார்.
அவரது மகளும் உடனே லொட்டரியை வாங்கி பரிசு விழுந்த எண்ணை சரி பார்த்த போது, அவருக்கு ஜாக்பாட் பரிசு விழுந்திருப்பது உண்மை என்பது தெரிய வந்தது.
தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பெயரை “நம்பிக்கையுள்ள பாட்டி” என்று அடையாளப்படுத்திக் கொண்ட அந்த மூதாட்டி, “பரிசுத் தொகையில் பேரக்குழந்தைகளுக்கு உதவி செய்வேன்” என்றார்.