பிரேசிலின் Rio Grance de Sul மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கிய உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57ஆக அதிகரித்துள்ளது.
74 பேர் காயமடைந்துள்ளனர், 67 பேரைக் காணவில்லை அத்துடன், சுமார் 70,000 பேர் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளனர் என்று பொதுத் தற்காப்புப் பிரிவு கூறியுள்ளது.
நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருவதால் பொருளியல் முக்கியத்துவம் வாய்ந்த 1.4 மில்லியன் மக்கள் வசிக்கும் Porto Alegre நகருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
அத்துடன், இடுப்பளவு வெள்ளத்திலிருந்து மக்களை மீட்க அதிகாரிகள் போராடுகின்றனர்.
இதேவேளை, மில்லியன்கணக்கான மக்கள் குடிநீர் இன்றி அவதியுறும் நிலையில், அங்கு ஏற்பட்டுள்ள சேதத்தை விவரிக்க முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நகருக்கான இருவழிப் பஸ் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ள நிலையில், நகரிலிருந்து வெளியேற மக்கள் பேருந்துக்காக வரிசையில் காத்திருக்கின்றனர்.
இதேவேளை, Porto Alegre சர்வதேச விமான நிலையத்தில் அனைத்துப் பயணங்களும் தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளன.