இலண்டனில் உள்ள எட்ஜ்வரி பகுதியில் வசித்து வந்த அனிதா முர்கே (வயது 66) அங்குள்ள மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், அனிதா கடந்த 9ஆம் திகதி நண்பகல் 12 மணியளவில் எட்ஜ்வரி நகரின் புர்க் பிராட்வே பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்துக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது, அங்கு வந்த இளைஞர் ஒருவர் கத்தியால் அனிதாவை கழுத்து, மார்பு பகுதியில் சரமாரியாக குத்தியுள்ளார். இதனால், காயமடைந்த அனிதா சம்பவ இடத்திலேயே விழுந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் அனிதாவின் சடலத்தை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து, தப்பியோடிய ஜலால் டிபெல்லா (வயது 22) என்ற இளைஞனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளைஞனிடம் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து, சந்தேக நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.