பப்புவா நியூ கினியாவில் நேற்று பெய்த கடும் மழையால் அங்குள்ள எங்கா மாகாணத்தின் காகோலாம் கிராமத்தில் திடீரென ஏற்பட்ட மண்சரிவில் பல வீடுகள் சேதமடைந்தன.
அதிகாலை 3 மணியளவில் மண்சரிவு ஏற்பட்டதால் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பலர் மண்ணில் புதையுண்டனர்.
இதனையடுத்து அங்கு மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்ட போதும், 100க்கும் மேற்பட்டோர் பலியானதாக சர்வதேச ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டு இருந்தன.
இந்நிலையில், இந்த நிலச்சரிவில் பலியானோரின் எண்ணிக்கை 300க்கும் மேல் உயர்ந்துள்ளதாக உள்ளூர் ஊடங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த மண்சரிவில் 300க்கும் மேற்பட்டோர் மற்றும் 1,182 வீடுகள் புதையுண்டதாக இதுகுறித்து எங்கா மாகாணத்தில் உள்ள லகாயிப் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் அய்மோஸ் அகேம் கூறியுள்ளார்.
மண்சரிவில் சிக்கி மேலும் பலர் மாயமாகி இருப்பதால் அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.