அமெரிக்காவை பந்தாடிய புயலுக்கு குழந்தைகள் உள்பட 19 பேர் பலியாகினர். 100 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் 5 லட்சம் பேர் இருளில் மூழ்கி தவிக்கும் நிலை ஏற்பட்டது.
அமெரிக்காவின் மத்திய பகுதிகளான டெக்சாஸ், ஓக்லஹோமா, ஆர்கன்சாஸ் ஆகிய மாகாணங்களை புயல் தாக்கியது.
இதன்போது, ஏராளமான வீடுகள் சேதம் அடைந்ததுடன், இடிபாடுகளில் பலர் சிக்கிக்கொண்டனர்.
இதனையடுத்து, அங்கு சென்ற மீட்பு படையினர் மீட்பு பணிகளை முன்னெடுத்தனர்.
இந்த சம்பவத்தில் குழந்தைகள் உள்பட 19 பேர் உயிரிழந்ததுடன், படுகாயம் அடைந்த 100க்கும் மேற்பட்டோருக்கு வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கட்டிட இடிபாடுகளில் சிக்கி உள்ள நபர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை, புயல் காரணமாக மரங்கள், மின்கம்பங்களும் முறிந்து விழுந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. எ
இதனால், சுமார் 5 இலட்சம் பேர் இருளில் மூழ்கியதுடன் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.