இங்கிலாந்தின் மே மாதத்தில் இருந்ததை விட இது ஜூன் மாதத்தில் அதிக மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூடான கோடையை எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த தகவல் மோசமானதாக இருக்கலாம்.
எனினும், வானிலை அலுவலகம் அதன் இணையதளத்தில், “ஜூன் மாதத்தின் பெரும்பகுதி தொடர்ச்சியான வானிலை மாற்றங்களை கொண்டிருக்கும்” என, தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலண்டனில் வானிலை இன்று (மே 28) மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், தென்மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
காலை நேரத்தில் அனைத்து பகுதிகளிலும் சில நேரங்களில் கனமழை பெய்யும். இன்று மதியம் சிறிது நேரம் கழித்து வெயில் காலநிலை காணப்படலாம். அதிகபட்ச வெப்பநிலை 18Cஆக இருக்கும்.
அதேசமயம் இன்றிரவு ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும், பெரும்பாலும் நள்ளிரவுக்கு முன் மழை பெய்யலாம். குறைந்தபட்ச வெப்பநிலை 10C ஆக காணப்படும்.
நாளை (மே 29) சிறியளவு மழை அல்லது வெயிலுடன் கூடிய காலநிலை காணப்படும். பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய கனமழை காணப்படும்.
அத்துடன், அதிகபட்ச வெப்பநிலை 21C ஆக இருக்கும்.