சிரியா நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள டார்குஷ் நகரின் அருகே பாடசாலை பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்த நிலையில், குழந்தைகள் உள்ளிட்ட 20 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
ஆதரவற்றோருக்கான பாடசாலையில் இருந்து மாணவர்கள் மற்றும் சில ஆசிரியர்களை ஏற்றி வந்த பேருந்து, ஓரண்டஸ் ஆற்றை ஒட்டியுள்ள மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்தபோது, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் உள்ள ஆற்றுக்குள் விழுந்தது.
மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். மலைக் குன்றின் ஓரத்திலும் ஆற்றிலும் சுமார் 6 மணி நேரம் மீட்புக் குழுவினர் தேடும் பணியில் ஈடுபட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.