அமெரிக்க குடிமக்களை சட்டவிரோதமாக திருமணம் செய்து கொண்டுள்ள சுமார் 5 இலட்சம் புலம்பெயர்ந்தோருக்கு குடியுரிமை வழங்கும் திட்டத்தை ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு குறித்த வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசிக்கும் 5 இலட்சம் பேர் சலுகை பெறுவார்கள் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
இந்தத் திட்டம் அமெரிக்கர்களை திருமணம் செய்தவர்கள் மற்றும் அவர்களது குழந்தைகள் நிரந்தர வதிவிடத்திற்கு விண்ணப்பிக்க அனுமதிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, சட்டவிரோத குடிமக்களை நாடு கடத்தும் குடியரசுக் கட்சியின் போட்டியாளரான டொனால்ட் டிரம்பின் திட்டத்துக்கு இது முரணான திட்டமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.