இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான நேரடி பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான உறவு மற்றும் பேச்சுவார்த்தைகள் தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் பதிலளித்தபோது இதனைக் கூறியுள்ளார்.
இந்தியா – பாகிஸ்தான் நேரடி பேச்சுவார்த்தையின் நோக்கம் மற்றும் தன்மை ஆகியவை அந்த இரு நாடுகளால் தீர்மானிக்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்கா அதை தீர்மானிக்க முடியாது என அவர் குறிப்பிட்டார்.
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பாகிஸ்தான் தலைவர்களுடன் அமெரிக்கா தொடர்ந்து உரையாடி வருகின்றது என்றும், பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான வருடாந்த உரையாடல்கள் மற்றும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் பிராந்திய பாதுகாப்பு குறித்தும் விரிவாக விவாதிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.