தொழில்நுட்பத் துறையில் ஜாம்பவான்களாக திகழும் Apple மற்றும் Meta ஆகிய நிறுவனங்கள் இணைந்து செயற்பட வாய்ப்புக் காணப்படுவதாக Wall Street Journal செய்தி வெளியிட்டுள்ளது.
அதாவது, இந்த நிறுவனங்கள் இரண்டும், செயற்கை நுண்ணறிவு அம்சத்தில் ஒத்துழைப்பது குறித்து கலந்துரையாடி வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.
Meta நிறுவனம், Apple-இன் iPhone கைபேசிகளிலும் இதர கருவிகளிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைக் கொண்ட Facebook தளத்தை ஒருங்கிணைக்க எதிர்பார்ப்பதாகவும் Apple நிறுவனமும் அதன் சொந்தச் செயற்கை நுண்ணறிவு அம்சங்களைக் கொண்டிருந்தாலும், மேலும் குறிப்பிட்ட, சிக்கலான, பணிகளைச் செய்ய உதவும் தொழில்நுட்பத்தை அதன் பங்காளிகளிடம் நாடுவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
அவ்வாறு Apple மற்றும் Meta நிறுவனங்கள் ஒத்துழைக்க நேரிட்டால், அவற்றுக்கு இடையே மிக அரிய பங்காளித்துவமாக இது அமையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.