கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ரஷ்யாவின் படையுடன் உக்ரேன் போராடி வருகிறது.
இந்நிலையில், உக்ரேன் மற்றும் மொல்டோவா ஆகியவற்றுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்புரிமை கொடுப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன.
ஐரோப்பிய நாடுகள் ஒன்றுபட்டு இருப்பதற்கு உறுப்புரிமை வழிவகுக்கும் என்று உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி உறுதியாக நம்புகின்றார். எனவே, ஒன்றியத்தில் சேர உக்ரேனும் மொல்டோவாவும் 2022இல் விண்ணப்பத்தின.
உறுப்புரிமை அளிப்பதன் தொடர்புடைய பேச்சுவார்த்தை இப்போது தொடர்ந்தாலும் அது மேலும் பல ஆண்டுகள் நீடிக்கலாம்.
ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களின் சம்மதத்தைப் பெறவும் ரஷ்யாவின் எதிர்ப்பைச் சமாளிக்கவும் சிரமமாக இருக்கலாம்.
இந்நிலையில், மேற்படி நாடுகளுக்கு உறுப்புரிமை அளிக்கப்படாமலும் போகலாம்.