இவ்வாண்டின் (2024) உலகின் தலைசிறந்த விமான சேவைகளின் பட்டியலில் Qatar Airways முதலிடத்தைப் பிடித்துள்ளது.
அனைத்துலக விமானப் போக்குவரத்துத் தரவரிசைப் பட்டியலை உருவாக்கும் நிறுவனமான Skytrax இந்த முடிவுகளை வெளியிட்டுள்ளது.
இதில் இரண்டாம் இடத்தை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. அத்துடன், மூன்றாம் இடத்தை Emirates நிறுவனம் பிடித்துள்ளது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸுக்கும் Qatar Airwaysக்கும் இடையே எப்பொழுதும் கடும் போட்டி நிலவுகிறது. குறித்த பட்டியில் கடந்தாண்டு (2023) சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உலகின் தலைசிறந்த விமான சேவை நிறுவனமாக அறிவிக்கப்பட்டது. அதேபோல் 2022ஆம் ஆண்டில் Qatar Airways பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்திருந்த நிலையில் மீண்டும் அதைத் தனதாக்கிக் கொண்டுள்ளது.
இதேவேளை, இப்பட்டியலில் ANA All Nippon Airways நான்காம் இடத்திலும் Cathay Pacific Airways ஐந்தாம் இடத்திலும் இடம்பெற்றுள்ளன.