இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி 411 இடங்களில் வெற்றி பெற்று 14 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ளது.
தேர்தல் வெற்றியை அடுத்து இலண்டனில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் கீர் ஸ்டார்மர் வெற்றி உரையாற்றினார்.
அவர் பேசுகையில், “தேர்தல் வெற்றியின் மூலம் 14 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு அதன் எதிர்காலத்தை பெற்றுள்ளதுடன், மக்கள் மத்தியில் ஒரு நிம்மதி ஏற்பட்டுள்ளது.
இந்த மாற்றத்தை நாம்தான் செய்தோம். நம் முன்னால் சவால்கள் காத்திருக்கின்றன. நாட்டை புதுப்பிக்கும் பணி நம் முன் உள்ளது. பிரிட்டனை மீட்டெடுக்க நாம் தயாராக இருக்கிறோம். நாட்டின் மீது இருந்த ஒரு சுமை நீங்கிவிட்டது. இறுதியாக அந்த சுமை நீக்கப்பட்டுவிட்டது.
இன்று முதல் நாம் புதிய அத்தியாயத்தைத் தொடங்குவோம். மாற்றத்திற்கான வேலையைத் தொடங்குவோம். அரசியல் என்றால் அது பொது சேவை செய்வதற்கானது என்ற நிலையை மீண்டும் நாம் உருவாக்குவோம்” என்றார்.