கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18 மற்றும் 21 ஆம் திகதிகளுக்கு இடையில் வன்புணர்வு, வன்புணர்வு முயற்சி மற்றும் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 27 குற்றச்சாட்டுகளில் நபர் ஒருவருக்கு 11 ஆண்டுகள் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
காலின்ஸ் என்ற குறித்த நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, கிங்ஸ்டன் கிரவுன் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தண்டனை வழங்கப்பட்டது.
லூயிஸ் காலின்ஸ் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18 மற்றும் 21 க்கு இடையில் மூன்று வெவ்வேறு பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கியதாக கைது செய்யப்பட்டார்.
29 வயதான அவர் கடந்த கோடையில் லண்டனில் நான்கு நாட்களில் எட்டு பெண்களைக் குறிவைத்தார்.
“ஒரு பூங்காவில் தனியாக உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த ஒரு பெண்ணை கத்திமுனையில் வன்புணர்வுக்கு உள்ளாக்கியுள்ளார். ஒரு பெண்ணை வீட்டிற்குப் பின்தொடர்ந்து சென்று அவரது கட்டிடத்துக்குள் வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்றார். அத்துடன், அவர் பேருந்திலிருந்து பின்தொடர்ந்த ஒரு பெண்ணை வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்றார்” என அவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.