எத்தியோப்பியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், அங்குள்ள பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
இந்தநிலையில் கெஞ்சோ ஷாச்சா கோஸ்டி நகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமான வீடுகள் மண்ணில் புதையுண்டன.
அப்போது, மண்ணில் புதையுண்டவர்களை மீட்கும் முயற்சியில் அவர்களது உறவினர் இறங்கிய நிலையில், அங்கு மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டதால் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் மண்ணில் புதையுண்டனர்.
இதனையடுத்து அங்கு விரைந்த மீட்பு படையினர் மண்ணில் புதையுண்டவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
நேற்று மாலை வரை 157 பேர் இறந்ததாக உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இன்றுவரை பலி எண்ணிக்கை 229 ஆக உயர்ந்துள்ளளது.
இதில் சிலர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதுடன், பலரை காணவில்லை. எனவே, பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இதற்கிடையே நிலச்சரிவில் சிக்கி பலியானோருக்கு எத்தியோப்பிய பிரதமர் அபிய் அகமது ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.