– இவ்வாறு முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ரணிலும், சஜித்தும் சுயநலவாதிகள் என்றும், இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்றும் அவர் சாடினார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுக்கே தான் ஆதரவு வழங்குவேன் என்றும் அவர் அறிவித்தார்.
ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே மைத்திரிபால இந்த அறிவிப்பை விடுத்தார்.
“விஜயதாஸ ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்தான். அவருக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை நான் நிராகரிக்கின்றேன். நாட்டுக்காகத் துணிந்து செயற்படும் அரசியல்வாதியே அவர்.” – என்றும் மைத்திரிபால மேலும் தெரிவித்தார்.