ஒலிம்பிக் தொடக்க விழாவின்போதும் அதனையடுத்தும் ஏற்பட்ட சில தவறுகளுக்காக ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு மன்னிப்புக் கோரியுள்ளது.
ஒலிம்பிக் தொடக்க நிகழ்ச்சியில் இடம்பெற்ற ஓர் அங்கம் கிறிஸ்தவர்களை அவமதிப்பதுபோல் அமைந்ததாகக் குறைகூறப்பட்டது. எனினும், எவரையும் புண்படுத்தும் நோக்கில் தொடக்கவிழாவில் அந்த அங்கம் சேர்க்கப்படவில்லை என்று ஏற்பாட்டுக் குழு தெளிவுபடுத்தியது.
தென் சூடானுக்காக சிறிது நேரம் தேசிய கீதம் ஒலிக்கவிடப்பட்டது. தென் சூடான் தனி நாடாக பிரிந்து 10 ஆண்டுக்கு மேலாகிவிட்டது. இதனால் தவறான தேசிய கீதம் ஒலிக்கச் செய்யப்பட்டதற்கும் ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு வருத்தம் தெரிவித்துள்ளது.
அத்துடன், ஒலிம்பிக் தொடக்க விழாவின்போது பாரிஸில் கனத்த மழை பெய்ததால் நிகழ்வுகளில் காலதாமதங்கள் எற்பட்டன.
மேலும், பாரிஸின் செயின் ஆற்றில் ஏற்பட்டுள்ள மாசுபாட்டினால் ஒலிம்பிக் போட்டிகளுக்கான நீச்சல் பயிற்சியும் இரத்து செய்யப்பட்டது.
ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் சென் ஆற்றில், நீரின் தரம் குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. பாரிஸ் 2024 ஒலிம்பிக் குழுவும் உலக முப்போட்டிக் குழுவும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் அந்த விவரம் தெரிவிக்கப்பட்டது.
இம்மாதம் ஆற்றின் நீரில் சோதனைகள் நடத்தப்பட்டன. அப்போது சென் ஆறு நீச்சலுக்கு ஏற்றதாக இருந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், பாரிஸில் கனத்த மழை பெய்ததால் நீரின் தரம் குறைந்தது.