வட மேற்கு இங்கிலாந்தில் உள்ள Southport நகரின் நடனப் பள்ளியில் நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர்.
அத்துடன், 6 மாணவர்கள் உட்பட 11 பேர் காயங்களுக்கு உள்ளாகினர். அவர்களது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல் தெரிவிக்கிறது.
பிரபலப் பாடகி டெய்லர் சுவிஃப்ட்டின் (Taylor Swift) பாணியில் மாணவர்களுக்கு நடன வகுப்பு நடந்துகொண்டிருந்தபோது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
கொலை முயற்சியில் ஈடுபட்ட சந்தேகத்தில் 17 வயது இளைஞனர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரைப் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை. கத்திக்குத்துக்கான காரணம் ஆராயப்படுகிறது. சம்பவம் பயங்கரவாதம் தொடர்புடையது அல்ல என்று நம்பப்படுகிறது.
“இது போன்ற கொடூரமான சம்பவத்தை முன்பு பார்த்ததில்லை” என்று சம்பவத்தைப் பார்த்த ஒருவர் BBC செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இங்கிலாந்து மன்னர் மற்றும் பிரதமர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.