செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆசிரியர் தெரிவு இங்கிலாந்து நடனப்பள்ளி கத்திக்குத்து; மூன்றாவது சிறுமி மரணம்; வன்முறை வெடித்தது!

இங்கிலாந்து நடனப்பள்ளி கத்திக்குத்து; மூன்றாவது சிறுமி மரணம்; வன்முறை வெடித்தது!

1 minutes read

வட மேற்கு இங்கிலாந்தில் உள்ள Southport நகரின் நடனப் பள்ளியில் நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் காயமடைந்த சிறுமிகளில் சிகிச்சை பலன் இன்றி மேலும் ஒரு சிறுமி உயிரிழந்தார்.

இதனையடுத்து பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டுள்ளது.

பொலிஸாரின் வாகனங்கள் போராட்டக்காரர்களால் தீ வைக்கப்பட்டுள்ளதுடன், களத்தில் நின்றிருந்த பொலிஸாருடன் பெருந்திரளான மக்கள் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

செங்கற்களைக் கொண்டும் கண்ணாடிப் போத்தல்களைக் கொண்டும் பொலிஸார் தாக்கப்பட்டுள்ளனர். இதில் சுமார் 39 பொலிஸார் கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

சம்பவ பிண்ணி

பாடகி டெய்லர் சுவிப்ட் பாணியில் நடத்தப்பட்ட Southport நகரின் நடனப் பள்ளியில் நேற்று (30) கத்திக்குத்துத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் இரு சிறுமிகள் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர். அவர்களில் 8 பேர் சிறுமிகள். இருவர் பெரியவர்கள். ஐந்து சிறுமிகளின் நிலை கவலைக்கிடமாய் உள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது. அவர்களில் மூன்றாவது சிறுமியும் உயிரிழந்தார்.

இந்நிலையிலேயே, Southport பகுதியில் பள்ளிவாசலுக்கு வெளியே நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து, சம்பவத்தில் பாதிக்கப்படவர்களுக்கு நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் போராட்ட இடத்திற்கு வரவழைக்கப்பட்ட கலவரத் தடுப்பு பொலிஸாருக்கும் மக்களுக்கும் வன்முறை ஏற்பட்டது.

இங்கிலாந்து நடனப்பள்ளி கத்திக்குத்து

வன்முறையுடன் தொடர்பு 

இந்த வன்முறைக்கு பின்னால் English Defence League என்ற அமைப்பு இருக்கலாம் என நம்புவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அதேவேளை, Southport நகர் போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது வைராலாக பகிரப்பட்டு வருவதுடன், அவை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன.

இளைஞன் கைது

நடனப் பள்ளியில் நடத்தப்பட்ட கத்திக்குத்துத் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 17 வயது இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளார். கத்திக்குத்துக்கான காரணம் ஆராயப்படுகிறது. சம்பவம் பயங்கரவாதம் தொடர்புடையது அல்ல என்று நம்பப்படுகிறது.

தொடர்புடைய செய்தி : இங்கிலாந்தில் கத்திக்குத்து; மாணவர்கள் இருவர் உயிரிழப்பு

இங்கிலாந்து நடனப்பள்ளி கத்திக்குத்து

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More